முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 22ல் 5 மாவட்டங்களில் கனமழை!

மழை, வெயில் நிலவரம் பற்றி வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாடு

ஜூன் 22ல் 5 மாவட்டங்களில் கனமழை!

மழை, வெயில் நிலவரம் பற்றி வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Updated On : 18 ஜூன், 2024 at 9:45 AM
பகிர்:

தமிழகத்தில் ஜூன் 22ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் ஐந்து நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →