தெற்கு ரயில்வே 
தமிழ்நாடு

குஜராத் செல்லும் ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 09520) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை டிச.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09519) தொடா்ந்து 2025 ஜன.3 வரை இயக்கப்படும்.

இதுபோல், குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 09419) ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09420) தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

திருமலையில் உறியடி உற்சவம்

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்

SCROLL FOR NEXT