கோப்புப்படம் 
தமிழ்நாடு

மார்ச் 4-ல் சென்னை வருகிறார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 4-ல் சென்னை வரவுள்ளதாக தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தல் பாஜக வாக்குறுதி தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "வரும் மார்ச் 4 ஆம் தேதி கல்பாக்கம் மற்றும் சென்னை நந்தனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதுவரை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நான் பதவி வகித்து வருகிறேன்.

மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை எந்தத் தொகுத்யில் போட்டியிட சொன்னாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். அனைத்தையும் கட்சி முடிவு செய்யும்.

உதயநிதி ஒரு தோல்வியுற்ற நடிகர், அவர் அப்பா மற்றும் தாத்தா பெயரை எடுத்துவிட்டால் அவரால் ஓட்டுவாங்க முடியுமா?" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT