தமிழ்நாடு

நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!

நந்தனம் பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Manivannan.S

சென்னை நந்தனம் திடலில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சாலையில் இருபுறமும் தொண்டர்கள் மலர்களைத் தூவியும், உற்சாகமாக கோஷங்களை எழுப்பியும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வழியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ உள்பட 15 ஆயிரம் போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை மாலை அவர் மீண்டும் தெலங்கானா மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT