தமிழ்நாடு

தெலங்கானாவில் 10 தொகுதிகளில் விசிக போட்டி!

கர்நாடகத்தில் 6 மக்களவைத் தொகுதிகளிலும், கேரளத்தில் 3 தொகுதிகளிலும் விசிக போட்டி.

DIN

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 6 மக்களவைத் தொகுதிகளிலும், கேரளத்தில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தென்மாநில விசிக செயற்குழு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்களவைத் தேர்தல் குறித்து விரிவான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திரத்தில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து நாடாளுமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். இதற்காக ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவிடமிருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.

மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வலியுறுத்தி தென்மாவட்டங்களில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT