கே. அண்ணாமலை 
தமிழ்நாடு

பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி? அண்ணாமலை இன்று தில்லி பயணம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் இன்று தில்லி செல்கின்றனர்.

DIN

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணிப் பேச்சை தீவிரப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக மற்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வேட்பாளரை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், உத்தேச பட்டியலுடன் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் இன்று தில்லி செல்லவுள்ளனர். அண்ணாமலை அளிக்கும் பட்டியலை ஆராய்ந்து விரைவில் தமிழக பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT