புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்!

படுகொலை செய்யப்பட்ட புதுவை சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

DIN

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்தவா் நாராயணன். இவரது மனைவி மைதிலி. இவா்களது மகள் ஆா்த்தி (9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2-ஆம் தேதி மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆா்த்தியைக் காணவில்லை. அவரை பெற்றோரும், உறவினா்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆா்த்தி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மாணவியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே குடும்பத்தினா், உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சோலை நகா் அம்பேத்கா் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீா் கால்வாயில் தனியாா் மாட்டுக் கொட்டகை அருகே மாணவி ஆா்த்தி சடலமாகக் கிடப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, வேட்டியால் அவரது சடலம் கட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்தது. சடலத்தை மீட்ட போலீஸாா், உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணியினா் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனா். 

குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிககை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சிறுமியின் பெற்றோரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT