தமிழ்நாடு

இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் உள்பட மூவர் ஆஜர்

DIN

பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான நடைமுறைக்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் ஆஜராகியுள்ளனர்.

பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான நடைமுறைக்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் இலங்கை தூதரகத்தில் இன்று நோ்காணல் நடைபெறுகிறது. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், மூவரும் திருச்சி முகாமிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

முருகனுக்கு கடவுச்சீட்டு தர நடவடிக்கை எடுக்கும்படி, அவரது மனைவி நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, இன்று அவா்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக செய்யப்பட்டிருந்தன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்ட மூவரும், தூதரகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

SCROLL FOR NEXT