அங்கித் திவாரி(கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் அவா் ஜாமின் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர்பான சீராய்வு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அங்கித் திவாரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவரது ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஓபன் மகளிா் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்!

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

பிடாரம்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

விளாத்திகுளம் எம்எல்ஏ மக்கள் குறைகேட்பு

SCROLL FOR NEXT