தமிழ்நாடு

மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

முதல்கட்டமாக மார்ச் 24 முதல் 31ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

DIN

திருச்சியில் மார்ச் 24ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

முதல்கட்டமாக மார்ச் 24 முதல் 31ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். இதில் அதிமுக சார்பிலும் கூட்டணி கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் 24-ல் திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். (மாலை 4 மணி)

மார்ச் 26-ல் தூத்துக்குடி (மாலை 4 மணி), திருநெல்வேலியில் (இரவு 7 மணி) பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 27-ல் கன்னியாகுமரி (மாலை 4 மணி), தென்காசி (இரவு 7 மணி) தொகுயில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 28-ல் விருதுநகர் (மாலை 4 மணி), ராமநாதபுரம் (இரவு 7 மணி) தொகுதிகளில் பிரசாரம்.

மார்ச் 29-ல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பிரசாரம்

மார்ச் 30-ல் புதுச்சேரி, கடலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 31-ல் சிதம்பரம் (மாலை 3.30 மணி), மயிலாடுதுறை (மாலை 5.30 மணி), நாகப்பட்டினம் (மாலை 7.30 மணி) தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

SCROLL FOR NEXT