துரை வைகோ கோப்புப் படம்
தமிழ்நாடு

பாஜகவை எதிர்ப்பதை அதிமுக உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ

அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

DIN

வரும் மக்களவைத் தேர்தல், மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுக சார்பில் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, மத்தியில் யாரை ஆட்சியில் விடக்கூடாது என்பதற்கானத் தேர்தல் இது. மக்களவைத் தேர்தலில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட உயர்மட்ட ஆட்சிக் குழுவினர் ஒப்புதல் அளித்தனர். மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜகவை எதிர்ப்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT