முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் விஜயபிரபாகரன் விருப்ப மனு: தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள்

விருதுநகரில் விஜயபிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 12:18 PM
பகிர்:

வரும் மக்களவைத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கியிருக்கிறது.

இந்த நிலையில், தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்.

Advertisement

அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்தக் கூட்டணியில் இடம்பெறும் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.