அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை: பாஜக வேட்பாளர் பட்டியல்!

DIN

தமிழகத்தில் போட்டியிடும் 9 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் பி. செல்வனும், வேலூரில் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுகின்றனர்.

கிருஷ்ணகிரி நரசிம்மன், நீலகிரி (தனித் தொகுதி) மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பெரம்பலூர் டி.ஆர் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலும், பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏற்கெனவே பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT