முகப்பு
தமிழ்நாடு

ஏ.சி.சண்முகத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.சி. சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 22 மார்ச் 2024, 12:35 pm IST
நடிகர் ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
பகிர்:

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.ச ண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தில்லி தலைமையில் அறிவித்தபின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நேற்று(மார்ச். 21) வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஏ.சி. சண்முகத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.