தமிழ்நாடு

டி.ஆர்.பாலு, ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

துரை வைகோ, கதிர் ஆனந்த், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்திலும் போட்டியிட இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதேபோல், திருச்சியில் மதிமுக துரை வைகோ, வேலூரில் திமுக கதிர் ஆனந்த், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT