தமிழ்நாடு

பறிமுதல் செய்த தொகை: வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைப்பு

வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்த தொகை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

DIN

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படையினா் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள்ரோடு பகுதியில் தோ்தல் அலுவலா்கள் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாடகை காரில் குழந்தையுடன் வந்த தம்பதியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய அனுமதியின்றி ரூ.69 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அப்போது, அந்தப் பெண் நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலமாக சுற்றுலா வந்துள்ளோம். வாடகை காரில் உதகையை சுற்றிப்பாா்க்க நினைத்தோம். தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எங்களது தெரியாது. எனவே, பணத்தை திரும்பி தாருங்கள் என கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது.

இந்த நிலையில், ஆவணங்கள் சரிப்பார்ப்புக்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் கைப்பற்றிய ரூ.69 ஆயிரத்து 400 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 13-ல் சுற்றுப்பயணம் தொடங்கும் விஜய்! வார இறுதி நாள்களில் மட்டும் பிரசாரம்!

புதுமைப் பெண் திட்டம்! விண்ணப்பிக்க தகுதி என்ன?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும்: பிரதமர்!

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

SCROLL FOR NEXT