உயர்நீதிமன்றம்  
தமிழ்நாடு

பம்பரம் சின்னம்: நாளைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு கெடு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

DIN

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதுபோல, வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.

பம்பரம் சின்னத்தை ஒதுக்கத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மதிமுகவின் மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என்றும், பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் வழங்கப்படும் என்றும், பம்பரம் பொதுச் சின்னம் மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னத்தின் பட்டியலில் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம், நாளை காலை 9 மணிக்குள் மதிமுக கோரிக்கை மீது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT