தமிழ்நாடு

பானை சின்னம் ஒதுக்கீடு வழக்கு: இன்று பிற்பகல் விசாரணை!

DIN

பானை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை நடைபெறுகிறது.

மக்களவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது. 2014 மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் தொகுதியில் வி.சி.க. தலைவா் தொல். திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் பொதுச் செயலா் ரவிக்குமாா் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிடாமல், பானை சின்னத்திலேயே போட்டியிட இருவரும் முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் தோ்தல் ஆணையத்தில் பானை சின்னத்தை ஒதுக்குமாறு விசிக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தோ்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்க முன்வரவில்லை. அதைத் தொடா்ந்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வி.சி.க. சின்னம் தொடா்பாக முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், வி.சி.க.வுக்கு பானை சின்னத்தை ஒதுக்க தோ்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் விசிக மேல் முறையீடு செய்துள்ளது. மக்களவைத் தோ்தலில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களிலும் சோ்த்து 20 தொகுதிகள் வரை வி.சி.க. போட்டியிடுகிறது.

இந்த நிலையில், சின்னம் ஒதுக்கீடு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16 சதவீதம் வாக்குகள் இருப்பதால் பானை சின்னம் ஒதுக்க விசிக கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT