தமிழ்நாடு

தொல். திருமாவளவனுக்கு பானை, மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

DIN

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் சிதம்பரத்தில் தொல். திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவனுக்கு பானைச் சின்னம் ஒதுக்கி தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் விழுப்புரம் தொகுதியில் பேட்டியிடும் ரவிக்குமாருக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதேபோல் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் உள்பட வேலூரில் மொத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT