முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:

உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம்: 'பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது.'

பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் மிக மோசமான இடம், கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோரின் படுகொலைகள்; அதிகாரத்தில் இருப்போரைப் பற்றி உண்மையை எடுத்துரைக்கும் சித்திக் காப்பான், ரானா அய்யுப் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கைப் போற்றும் அதே வேளையில், பேச்சு சுதந்திரத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்கவும் பத்திரிகையாளர்கள் அச்சம், கொடுங்கோல் தணிக்கைமுறை இன்றிப் பணியாற்றவும் போராட உறுதியற்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT