கோப்புப் படம். 
தமிழ்நாடு

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

DIN

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதி உள்ளனர்.

தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

சென்னையில் எழும்பூர் டிபிஐ வளாகத்தில் அதாவது அன்பழகன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ‍தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்‍வு முடிவுகளை தெரிந்து கொள்வதோடு, அவர்கள் வழங்கிய கைப்பேசி எண்ணிலும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT