கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை (மே 6) நடைபெறவுள்ளது.

DIN

சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிா்மா திருநாள் எனும் கோரதம் (பங்குனி தேர்) ஆகிய விழாக்களில் நம்பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருள்வாா்.

மாசி மாதத்தில் நடைபெறும் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவாா்.

நிகழாண்டு நடைபெற்று வரும் சித்திரைத் தோ்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் மே 6- ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை ஸ்ரீரங்கத்துக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT