கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

DIN

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் 2478 பள்ளிகள் நூறு சதவீதம் தேரச்சி பெற்றுள்ளனர். இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் 91.32%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 95.49%

தனியார் பள்ளிகள் 96.7%

மகளிர் பள்ளிகள் 96.39%

ஆண்கள் பள்ளிகள் 86.96%

இருபாலர் பள்ளிகள் 94.7%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT