கோப்புப் படம். 
தமிழ்நாடு

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதுவே 91.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-இல் தொடங்கி, தொடர்ந்து 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இத்தேர்வை மாணவர்கள் 11,863 பேரும், மாணவிகள் 13,762 பேரும் என மொத்தம் 25,625 பேர் 105 தேர்வு மையங்களில் எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலையில் வெளியானது.

இதில் மாணவர்கள் 10,410 பேரும், மாணவிகள் 12,991 என மொத்தம் 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 87.75 சதவீதமும், மாணவிகள் 94.40 சதவீதமும் என மொத்தம் 91.32 சதவீதம் பேர் அடைந்துள்ளனர்.

இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

மலையுச்சியின் காற்றாக... சல்மா அருண்!

அம்மன் கண்களில் இருந்து வழிந்த நீர்! பக்தர்கள் பரபரப்பு!

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

SCROLL FOR NEXT