தமிழ்நாடு

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை வரை இயக்கப்படும் ‘டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் (22160)’, இன்று(மே. 7), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக, இரவு 11.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இணை ரயில் தாமதமாக இயக்கப்படுவதால், 10.15 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள், அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடந்த இரு நாள்களாக மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் கால தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

கலை அவள்... மமிதா பைஜூ!

ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 20 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT