தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை (மே 13- 18) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரு நாள்கள் செவ்வாய்க்கிழமை(மே. 14) மற்றும் புதன்கிழமை(மே. 15) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.