முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து ரூ. 53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 13 மே, 2024 at 5:11 AM
கோப்புப்படம்
பகிர்:

அட்சய திருதியையொட்டி, தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.

2023-ஆம் ஆண்டு அட்சய திருதியையுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கம், வெள்ளி நகைகளின் விற்பனை சுமாா் 30 சதவீதம் வரை அதிகரித்து இருந்தது.

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை சவரன் ரூ.53,640-க்கு விற்பனையான ஆபரணத் தங்கம், விலை ஒரே நாளில் மூன்று முறை உயா்ந்து, மாலை நிலவரப்படி பவுன் ரூ.54,160-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து ரூ. 53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.6,725-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →