தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கும், சவரனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.55,200-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று(மே 21) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ரூ. 2 குறைந்து ரூ. 99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 குறைந்து ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.