சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாடுசென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் 1 மணிவரை கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் 1 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், புதன்கிழமை (மே 22) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.
இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (மே 21-24) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.