திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சி 
தமிழ்நாடு

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம்!

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

DIN

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்களுக்கு காட்சியளித்த திருப்போரூர் கந்தசாமி முருகன்

ஆழிசூழ் பூவுலகில் தருமமிகு தொண்டை மண்டலத்தில் பழமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமராபுரி சமரப்பதி எனும் காரணப்பெயர்கள் போற்றப்படுவதும் மூர்த்தி தளம் தீர்த்தம் என்னும் பெருமைகள் கொண்டது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமான் நிலத்திலும் நீரிலும் நின்று போர்புரிந்த இடங்கள் இருந்தாலும் விண்ணில் நின்று போர்புரிந்த பெருமை கொண்ட திருப்போரூர் தலத்தில் வள்ளி-தெய்வானை உடனுறை செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் மூலிகைகளை திருமேனியாக கொண்டு எழுந்தருளி நாடி வரும் பக்தர்களுக்கு வாரி வழங்கி அருள் பாலிக்கும் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

தினந்தோறும் காலை, மாலை என இருவேளையும் ஒவ்வொரு வாகனத்தில் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதிப்புறப்பாடு நடைபெற்றது. வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை கந்தசாமி கோயில் சரவணப் பொய்கை திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை முருகப்பெருமான் வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பும் நிகழ்வு இதனைத் தொடர்ந்து கஜமுகசுரன் சிங்கமுகன் உள்ளிட்ட சூரர்களை அழிக்கும் நிகழ்வும், மாமரத்திற்குள் மறைந்திருந்த சூரபத்மனின் ஆணவத்தை அழித்து சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சூரசம்ஹாரம்

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் நிகழ்வில் கஜமுக சூரன், சிங்கமுக சூரன், பானுகோப சூரன், அகிமுகி சூரன், தாரகாசூரன், பத்மாசூரன் போரிடும் காட்சிகளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்துவந்து கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கண்டும் முருகப்பெருமானையும் தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கு.குமரவேல், கத்தார் மற்றும் உதவி ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் வெற்றி ஆலய சிவாச்சாரியார்கள் திருக்கோயில் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் சூரசம்ஹார நிகழ்வை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பக்தர்களுக்கு காட்சியளித்த வள்ளி-தெய்வானை உடனுறை திருப்போரூர் கந்தசாமி முருகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT