அரசு காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு. 
தமிழ்நாடு

விருதுநகர்: அரசு காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

DIN

சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பரிசுகள், இனிப்புகள் வழங்கினார். மேலும் காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை முதல்வர் ஸ்டாலின் வாகனப் பேரணி மேற்கொண்டார்.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து அவர் கையசைத்தார். திமுக தொண்டர்கள் கொடுத்த சால்வை உள்ளிட்ட பரிசுகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு தொண்டர்கள் சால்வை, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: மேஷம் - மீனம்!

பொறியியல் கல்வி! எக்காலத்துக்கும் ஏற்றது இயந்திரவியல்!!

மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்!

Lock Down Movie Review | இப்படியொரு சம்பவம் நடந்தால்... | Anupama Parameswaran | Dinamani Talkies

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!

SCROLL FOR NEXT