கைதான துணை நடிகை. 
தமிழ்நாடு

துணை நடிகை மீனாவுக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தம்பெட்டமைன் விற்பதாக அண்ணா சாலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஓா் இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீஸாா், அந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டனா்.

ரூ. 10 கோடி கேட்டு எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?

அந்த பையில் இருந்த 5 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா், கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் எஸ்தா் நடித்து வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தம்பெட்டமைன் வழங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்தரை போலீஸாா் கைது செய்தனா். அதேவேளையில், எஸ்தா் மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். எஸ்தருக்கு மெத்தம்பெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற காவலையடுத்து துணை நடிகை மீனா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT