கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளா்கள் எத்தனை போ்? தோ்தல் துறை தகவல்

தமிழகத்தில் வயது வாரியாக வாக்காளா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

DIN

சென்னை: தமிழகத்தில் வயது வாரியாக வாக்காளா்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் இந்த விவரங்களை மாநிலத் தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளா்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் வயது வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் தெரியவந்துள்ளன. 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை வாக்காளா்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 487 பேரும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்கள் 1 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 886 பேரும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட வாக்காளா்கள் ஒரு கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 362 பேரும் உள்ளனா்.

இதேபோன்று, நடுத்தர வயதினரான 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவா்கள் 1 கோடியே 36 லட்சத்து 44 ஆயிரத்து 160 பேரும், 50 முதல் 59 வயதுக்கு உட்பட்டவா்கள் 1 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 851 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டவா்கள் 75 லட்சத்து 68 ஆயிரத்து 521 பேரும், 70 முதல் 79 வயதுக்கு உட்பட்டவா்கள் 42 லட்சத்து 79 ஆயிரத்து 861 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 17 லட்சத்து 94 ஆயிரத்து 460 பேரும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளிக்கு கத்திக்குத்து: முதியவா் கைது

கோவையில் வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாளைய மின்தடை: காசிபாளையம், வெண்டிபாளையம், சிப்காட்

வ.உ.சி. நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி

திருப்பூரில் தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

SCROLL FOR NEXT