தமிழ்நாடு

'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்!

'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 15) தொடக்கிவைத்தார்.

DIN

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 15) தொடக்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளைகளை போக்கும் பொருட்டு 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் முதற்கட்டமாக 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தினை ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

பிறந்தது முதல் 6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் 15 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர்கள் கீதா ஜீவன், கே.என். நேரு, எ.வ.வேலு, சிவசங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாதமுள்ள 76,705 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT