அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வருகை தந்துள்ளார்.
இதையும் படிக்க | 4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?
அந்தவகையில், ஜெயங்கொண்டத்தில் நகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.