என்எல்சி அனல்மின் நிலையம் 
தமிழ்நாடு

நெய்வேலி என்எல்சியின் முதல் அனல்மின் நிலையம் இடிக்கப்படுவது ஏன்?

நெய்வேலி என்எல்சியின் முதல் அனல்மின் நிலையம் இடிக்கப்படுவது ஏன்?

DIN

நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இது இடிக்கப்படுவது ஏன் என்பது பற்றி..

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது என்எல்சி அனல் மின் நிலையம். இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அனல்மின் நிலையம், ஜெர்மன், ரஷிய தொழில்நுட்ப பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 1962ஆம் ஆண்டு இந்த அனல்மின் நிலையம் கட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கியது.

கட்டப்பட்டபோதே, இதன் காலக்கெடுவானது அடுத்த 22 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 22 ஆண்டு காலம் முடிந்த பிறகும், சில முறை புதுக்கப்பட்டு, அனல் மின் நிலையம் இயங்கி வந்தது. ஆனால், ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக் கூடாது என்று உலக அளவில் விதி உள்ளதால், மத்திய பசுமைத் தீர்ப்பாயம், என்எல்சி முதல் அனல்மின் நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் மூடப்பட்டது. தற்போது அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களும், தொழிலாளர்களும் அங்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT