சென்னை அழைத்துவரப்பட்டார் நடிகை கஸ்தூரி!
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது.
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது.
இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை நேற்று கைது செய்தது. இதையடுத்துது சாலை மார்க்கமாக நடிகை கஸ்தூரி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Advertisement
Advertisement
நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!
இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரரின் பேச்சில் வெறுப்புணா்வு உள்ளதால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.