ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை! ஆனால்..?
வட மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை.. -வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சற்று முன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இன்றிலிருந்து 9 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
வரும் 27-ஆம் தேதி வரை, காலை வேளையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும், குளிர்கால சீதோஷ்ணம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாள்கள் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.