அன்ஷிதா 
தமிழ்நாடு

பிக் பாஸ் 8: ஆண்கள் அணியில் சந்தோஷம் மட்டும்தான்! புகழ்ந்த அன்ஷிதா

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா.

DIN

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் மாறுவர்.

இதற்கான ஆலோசனை பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் அணிப்பக்கம் செல்ல ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் ஆர்வம் காட்டினர். இதற்கான காரணமாக, தான் ஆண்கள் அணியில் யாரிடமும் நெருக்கமாக இல்லை, அவர்கள் பக்கம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்பது போன்ற கருத்துகளைக் கூறினர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஆண்கள் அணிப்பக்கம் இருந்த அவர், ஆர்.ஜே. ஆனந்தியிடம் ஆண்கள் அணி குறித்து பேசியுள்ளார்.

''ஒரு உண்மையை சொல்லட்டுமா? ஆண்கள் அணிப்பக்கம் எந்தவொரு வெடியும் இல்லை. அவர்களும் சாதாரணமானவர்களே. ஏதாவது கவலை இருந்தால் அங்கு வந்து உட்கார்ந்துகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அங்கு எனக்கு கவலையே ஏற்படவில்லை.

அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். தீபக் உடன் நான் அவ்வளவு பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், இது எல்லாமே நடந்தது.

அதேபோன்று அவர்கள் எனக்கும் என் கருத்துகளுக்கும் இடம் கொடுத்தனர். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம் என சுதந்திரம் கொடுத்தனர்'' எனக் கூறுகிறார்.

பெண்கள் அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆண்கள் அணிக்கு எதிரானவராக இருந்தாலும் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து மிகவும் நேர்மையான கருத்துகளை அன்ஷிதா முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வி.ஜே. விஷாலைத் தோற்கடித்து கேப்டனானார் மஞ்சரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT