கோப்புப் படம்  
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடுகள் தயார்! -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

வரும் 23-ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

DIN

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 23-ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 நாள்களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 300 மி.மீ.-க்கும் மேல் மழை பெய்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார்.

“தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 15 குழுக்களும் தயாராக இருப்பதாகவும், மிக கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

SCROLL FOR NEXT