கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவ. 26 - 29 வரை கனமழை

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை (நவ. 25) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் - புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவ. 26ஆம் தேதி தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி - புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவ. 27ஆம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவ. 28ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் - புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும்.

நவ. 29ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT