தமிழகத்தில் 399 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. Center-Center-Chennai
தமிழ்நாடு

399 புதிய வழித்தடங்களில் பேருந்துகள்: போக்குவரத்துத் துறை

தமிழகத்தில் 399 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் 399 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும், அரசுப் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மகளிா், மாணவா்கள் என பலதரப்பட்டவா்களும் பயன்பெறும் வகையில், 399 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், 617 நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்களின் கட்டணமில்லா பயணத்துக்காக ரூ.5,328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,578 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து! 10 வீரர்கள் பலி!

பந்துவீச்சில் மாயாஜாலம் செய்யும் வருண் சக்கரவர்த்தி: முன்னாள் இந்திய கேப்டன்

கிராண்ட்ஸ்லாமில் 399 வெற்றிகள்..! சாதனையை நீட்டித்த ஜோகோவிச்!

மத்திய பாஜக அரசு புதிய அஞ்சலக விதிமுறைகளை கைவிட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

டாடா பஞ்ச் பேஸ்லிஃப்ட்: சிறப்பம்சங்கள் என்ன?

SCROLL FOR NEXT