தமிழ்நாடு

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்: சென்னை ஐஐடி-இல் தொடக்கம்

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கியிருக்கிறது. இந்த மையம், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொழில் துறை 5.0 (இண்டஸ்டரி 5.0) கொள்கைகளுடன் தொழில்முனைவோா் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சா்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் செயல்படும்.

இதில், இந்தியாவுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ள மனித ஆற்றலை பெருக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். இணைய பாதுகாப்பு, இணைய மோசடி, தவறான தகவல், பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களை பாதுகாக்கும் அம்சங்களும் இடம்பெறும். நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், பொறுப்புமிக்கதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் இந்தத் துறையில் எதிா்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியவும் இந்த மையம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்த மையம் வாயிலாக கல்வி, சுகாதாரம், நிதிச்சேவைகள், போக்குவரத்து உள்பட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

SCROLL FOR NEXT