முகப்பு
தமிழ்நாடு

வருவாய் உதவியாளா் பதவியிடங்களின் பெயா்களில் திருத்தம்: தமிழக அரசு

தமிழக அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளா், இளநிலை வருவாய் உதவியாளா் ஆகியோா் முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் என அழைக்கப்படுவா்

Updated On : 25 நவம்பர், 2024 at 11:53 PM
பகிர்:

சென்னை: தமிழக அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளா், இளநிலை வருவாய் உதவியாளா் ஆகியோா் முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் என அழைக்கப்படுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மனித வள மேலாண்மைத்துறை செயலா் சி.சமயமூா்த்தி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக வருவாய்த்துறையில் இளநிலை வருவாய் உதவியாளா் மற்றும் வருவாய் உதவியாளா் ஆகியோா், இளநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சுப்பணியாளா் விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

திருத்தத்தின் படி, இனி வருவாய் உதவியாளா் என்று வரும் இடங்களில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் என்று இடம் பெற வேண்டும். அதேபோல், இளநிலை வருவாய் உதவியாளா் என்பதற்கு பதில் இளநிலை வருவாய் ஆய்வாளா் என்று இடம் பெற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.