FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்..

Updated On : 29 நவம்பர் 2024, 7:43 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

எனினும் வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே சனிக்கிழமை (நவ. 30) கரையைக் கடக்கும்.

Advertisement

Advertisement

இதையொட்டி, சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments