மின்ட் மேம்பாலம் 
தமிழ்நாடு

வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார் பார்க்கிங்

கனமழையால் வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

DIN

புயல் மற்றும் கனமழை எதிரொலியாக மக்கள் முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்களது கார்களை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்ட் மேம்பாலத்தின் மீதும் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வந்தனர்.

அதற்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வட சென்னை பகுதி மக்களும் தங்களது கார்களை மின்ட் மேம்பாலத்தின் மீது நிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வழியாகச் செல்வோர், இந்தக் காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று சிந்தித்துக்கொண்டே செல்கிறார்கள்.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கணித்ததைவிடவும் 2 நாள் தாமதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது.

ஃபெங்ஜால் புயல் கரையை நெருங்க நெருங்க மழையும் காற்றும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT