ஃபென்ஜால் புயல் 
தமிழ்நாடு

90 கி.மீ. தொலைவில் ஃபென்ஜால் புயல்!

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் ஃபென்ஜால் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் அம்மையம் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரியில் இருந்து 80 கி.மீ., மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கிறது.

கரைக்கு அருகே வரும்போது புயலின் நகர்வு வேகம் குறையும். புயல் காரணமாக சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் நிலையில் பலத்த சூறைக்காற்றினால் கடல் கொந்தளிப்புடன் உள்ளது.

சென்னை அருகே கோவளத்தில் 65 கி.மீ.க்கு மேல் பலத்த காற்று வீசி வருகிறது. கோவளம் சுற்றுப்பகுதியில் வீசி வந்த பலத்த காற்றின் வேகம் 65 கி.மீ.க்கு மேல் அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT