டைனோசர் பொம்மை 
தமிழ்நாடு

வேலூர் கோட்டையில் 12 அடி உயர டைனோசர் பொம்மை

வேலூர் கோட்டையில் புதிதாக நிறுவப்படவுள்ள 12 அடி உயர டைனோசர் பொம்மை சுற்றுலா பயணிகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது

DIN

வேலூர் கோட்டையில் புதிதாக நிறுவப்படவுள்ள 12 அடி உயர டைனோசர் பொம்மை சுற்றுலா பயணிகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

வேலூர் மாநகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் தமிழக அரசின் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இது தற்போது 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அதன் ஒரு அங்கமாக 26 லட்சம் மதிப்பீட்டில் 22 அடி நீளம், 12 அடி உயரம், 5. 1/2 அடி அகலத்தில் பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சியளிக்கும் பிரம்மாண்ட டைனோசர் பொம்மை வரவழைக்கப்பட்டுள்ளது.

இது உண்மையான டைனோசர் போலவே ஒலி எழுப்பி சுவாசிப்பது, வால் மற்றும் கால்களை அசைக்கும் வகையில் மிக சுவாரஸ்யமாகவும் பார்ப்பவர்களை கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை கூடுதலாக கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.

இதனை முறையாக நிறுவுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

சட்டமியற்றும் அமைப்புகளின் சுமுகமான செயல்பாடு அவசியம்: கிரண் ரிஜிஜு

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT