தமிழ்நாடு

திமுக அரசின் சாதனைகளுக்கு வெளிநாடுகளிலும் பாராட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் திமுக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு குவிந்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Sasikumar

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் திமுக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு குவிந்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வரவேற்றார்.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 17,427 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியது:

ஆவடி நகர நில அளவைத் திட்டத்தின் கீழ் 15,942 பட்டாக்களும், நத்தம் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் 500 பட்டாக்களும் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 567 பட்டாக்களும், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பயனாளிகளுக்கு இ}பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 318 பட்டாக்களும், சமத்துவபுரத்தில் பயனாளிகள் பெயரில் 100 பட்டாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, மாதவரம், மதுரவாயல் தொகுதிகளில் 17,427 பேர் பயன் அடைவர்.

தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் திமுக அரசின் சாதனைகளுக்கு தொடர்ந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. சபையில் உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டுசெல்லும் தூதுவராக பயனாளிகள் செயல்பட வேண்டும் என்றார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் நாசர் வெள்ளி செங்கோல் வழங்கினார்.

முன்னதாக, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் நாசர் தலைமையில் ஆவடி மாநகர எல்லையான பருத்திப்பட்டு முதல் பட்டாபிராம் வரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைப்பாளர் கே.சுரேஷ்குமார் ஏற்பாட்டில் திருநின்றவூரில் அமைக்கப்பட்ட நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரசு முதன்மைச் செயலர் பி.அமுதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை.சந்திரசேகரன் (பொன்னேரி) டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), க.கணபதி (மதுரவாயல், ஆவடி மாநகர மேயர் கு.உதயகுமார், பூந்தமல்லி நகரமன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி ஒன்றியக் குழு தலைவர் எம்.ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT