தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகம் - கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காறறழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்டிரம் கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.13ல் காலை மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்.. திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தரிமபுரி உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தொடர்ந்து அக்.15 வரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.